தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக பெங்களூருவில் இளைஞர் கைது

By செய்திப்பிரிவு

பெங்களூரு: பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கூறியதாவது: அசாம் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட அக்தர் ஹுசைன் லஷ்கர் (23) பெங்களூருவில் உள்ள திலக் நகரில் கடந்த ஓராண்டாக வசித்து வந்தார். அங்கு உணவுப்பொருள் விநியோகம் செய்பவராக பணியாற்றி வந்த இவர் டெலிகிராம் ஆப் மூலம் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பினருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். விரைவில் அந்த அமைப்பினரை சந்திக்கவும் திட்டமிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவின் சிறப்பு புலனாய்வு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு அக்தர் ஹுசைன் லஷ்கரை கைது செய்தனர். மேலும் அவரது அறையில் தங்கியிருந்த 4 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதனிடையே திலக்நகர் போலீஸார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, 5 பேரிடமும் விசாரணை நடத்தி வருவதை உறுதி செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

11 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

மேலும்