அருப்புக்கோட்டை அருகே மினி வேன் மீது கார் மோதியதில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயி ரிழந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கழுவன்பொட்டல் கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார். கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகன் மதிமாறன்(3). சரத்குமார், தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர் களுடன் மினி சரக்கு வேனில் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு நேற்று சென்றார். பின்னர் அனைவரும் அதே மினி வேனில் ஊருக்கு புறப்பட்டனர்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள வேலாயுதபுரம் விலக்கு பகுதியில் சென்றபோது, மதுரை நோக்கிச் சென்ற கார் வேன் மீது மோதியது. இதில் சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது.இதில் மினி சரக்கு வேனில் சென்ற சரத்குமார் மகன் மதிமாறன்(3), பவித்ரா(13), பெருமாளக்கா(50) ஆகியோர் உயிரிழந்தனர்.
மேலும் 13 பேர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் அருப்புக்கோட்டை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் காரில் வந்தவர்களும் விபத்தில் சிக்கி காயம் அடைந்து அருப்புக்கோட்டை அரசு மருத்து வமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து பந்தல்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago