ஓசூர் | சிறுமிக்கு மது கொடுத்த இளைஞர்கள் 6 பேர் கைது

By செய்திப்பிரிவு

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே 10 வயது சிறுமிக்கு மது கொடுத்து, பீடி புகைக்க வைத்த இளைஞர்கள் 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமிக்கு, இளைஞர்கள் சிலர் மது அருந்த கொடுத்து, பீடியை புகைக்க வைத்துள்ளனர்.

மேலும், இதை வீடியோவாக பதிவு செய்து வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.இப்பதிவை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி யடைந்தனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி, தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து, சங்கையா (22), குமார் (21), ரமேஷ் (22), சிவராஜ் (27), ருத்ரப்பா (26), அழகப்பன் (26) ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சிவருத்தரப்பா, மல்லேஷ் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

க்ரைம்

16 hours ago

க்ரைம்

18 hours ago

க்ரைம்

19 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

மேலும்