தூத்துக்குடி | ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே முடி திருத்தும் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி விஸ்வநாததாஸ் காலனியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் ராஜேந்திரன் (40). முடி திருத்தும் தொழிலாளியான இவரது மனைவி பாண்டியம்மாள் (31) .

இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் கணபதி மனைவி கருப்பாயி (48) என்பவருக்கும் தெரு குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கடந்த 3.4.2014 அன்று காலை மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது பாண்டியம்மாளுக்கு ஆதரவாக அவரது கணவன் ராஜேந்திரன் அங்கு வந்து கருப்பாயியை கண்டித்துள்ளார். ராஜேந்திரன் வெட்டி கொலை செய்யப்பட்டார். பாண்டியம்மாளுக்கும் கத்திக்குத்து விழுந்ததில் காயமடைந்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கணபதி மற்றும் அவரது குடும்பத்தினர் மும்பைக்கு சென்று தலைமறைவாகிவிட்டனர். நாலாட்டின்புத்தூர் போலீஸார் அவர்களை தேடி வந்தனர். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2 4.2022 அன்று மும்பையில் வைத்து போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கணபதி, அவரது மனைவி கருப்பாயி , மகன்கள் ராமர், லட்சுமணன், கண்ணன் ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

4 hours ago

க்ரைம்

5 hours ago

க்ரைம்

9 hours ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

மேலும்