சென்னை | பேருந்து ஓட்டுநரிடம் செல்போன் பறித்தவர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: திருச்சியைச் சேர்ந்தவர் ரமேஷ். பேருந்து ஓட்டுநரான இவர் நேற்று முன்தினம் இரவு நெற்குன்றம் பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகே நின்றுகொண்டு, செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது, ஒரே பைக்கில் வந்த 3 பேர், ரமேஷ் மீது தாக்குதல் நடத்தி, அவரது செல்போனை பறித்தனர். இதை சற்றும்எதிர்பாராத ரமேஷ் கூச்சலிட்டார். அவரின் அலறல் சப்தம் கேட்டு அந்த வழியாக வந்தவர்கள், செல்போனைப் பறித்த கொள்ளையர்களைச் சுற்றி வளைத்தனர்.

அப்போது தப்ப முயன்ற கொள்ளையர்கள், பைக்கோடு சரிந்து விழுந்தனர். இதில் ஒருவர் சிக்கிக் கொண்டார். மீதமுள்ள 2 பேரும் தப்பி ஓடினர்.

மதுரவாயல் காவல் நிலையம்

இதையடுத்து, பிடிபட்டவர் மதுரவாயல் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். போலீஸாரின் விசாரணையில், பிடிபட்டவர் சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த, 18 வயதுக்கு உட்பட்ட கல்லூரி மாணவர் என்பது தெரியவந்தது.

அவரைக் கைது செய்த போலீஸார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும், தலைமறைவான அவரது கூட்டாளிகள் 2 பேரைத் தேடி வருகின்றனர்.

கடைகளில் திருடியவர் கைது

வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள 3 கடைகளில், அண்மையில் அடுத்தடுத்து திருட்டுநடைபெற்றது. இது தொடர்பாக வடபழனி போலீஸார் விசாரணை நடத்தி, வடபழனியைச் சேர்ந்தஅப்துல் ஷெரீப் (22) என்பவரைக் கைது செய்தனர். இவர்மீது ஏற்கெனவே வடபழனி, விருகம்பாக்கம் காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். விசாரணை நடக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

2 hours ago

க்ரைம்

3 hours ago

க்ரைம்

7 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

மேலும்