புதுச்சேரி: புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் மனைவியிடம் 85 பவுன் நகைகளை மோசடி செய்த வழக்கில், தேடப்பட்டு வந்த தோழியை 76 நாட்களுக்கு பிறகு தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
புதுச்சேரி லாஸ்பேட் பெத்திசெட் பகுதியில் வசிக்கிறார் பா.ஜ. மாநில தலைவராக உள்ளவர் சாமிநாதன். இவரது மனைவி விஜயலட்சுமி. இவரது தோழி வாணரப்பேட்டையை சேர்ந்த விஜயகுமாரி (50). இருவரும் படிக்கும் காலத்திலிருந்தே தோழிகள். விஜயகுமாரி தனது கடன் பிரச்னை, குழந்தைகளின் படிப்பு செலவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி சாமிநாதன் மனைவி விஜயலட்சுமியிடம் கடந்த 2018-ம் ஆண்டு பணம் வாங்கியுள்ளார். அதை சில சமயங்களில் திருப்பியும் கொடுத்துள்ளார்.
விஜயலட்சுமி பணம் இல்லாத நேரங்களில் தனது தோழிக்கு உதவிடும் எண்ணத்தில் குடும்பத்தினருக்கு தெரியாமல் தோழிக்கு நகையை கொடுத்துள்ளார். அதை விஜயகுமாரி தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து பணம் வாங்கி செலவழித்துள்ளார்.
கடந்த 2020 ம் ஆண்டு வரை 85 பவுன் நகைகளை பெற்று அடகு வைத்து செலவழித்துள்ளார். அந்த நகைகளை விஜயலட்சுமி திருப்பி கேட்டபோது அதை கொடுக்காமல் ஏதாவது காரணம் கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
» பாடல் பிறந்த கதை | வாலி எழுதிய அரசியல் பாட்டு!
» குடியரசுத் தலைவர் தேர்தல்: பாஜக வேட்பாளருக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள்
இந்தநிலையில் விஜயலட்சுமி தனது மகளுக்கு திருமணத்திற்காக நகைகள் தேவை என்று கேட்டுள்ளார். ஆனால், அதற்கு விஜயகுமாரி முறையாக பதில் அளிக்கவில்லை. அவரைத் தொடர்பு கொள்ளவும் முடியாமல் இருந்தது.
இதுதொடர்பாக லாஸ்பேட்டை போலீசில் விஜயலட்சுமி புகார் செய்தார்.அதன்பேரில் லாஸ்பேட்டை போலீஸார் விஜயகுமாரி மற்றும் அவரது உறவினர்கள் மீது கடந்த மே மாதம் 2 ம்தேதி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த விஜயகுமாரியை, தனிப்படை போலீஸார் 76 நாட்களுக்கு பிறகு பொள்ளாச்சியில் கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்தனர்.
போலீஸ் தரப்பில் கூறுகையில், "பாஜக தலைவர் மனைவியிடம் 85 சவரன் நகைகளை வாங்கி அடகு வைத்து தலைமறைவான விஜயகுமாரியை கைது செய்துள்ளோம். நகையை அடகு வைத்து அதிலிருந்து கிடைத்த பணத்தைக்கொண்டு கடன்களை அடைத்துள்ளார். பின்னர் அவரது மகளை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பியதாக தெரிவித்துள்ளார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தோம்.
விஜயகுமாரியை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தந்துள்ளோம். விஜயகுமாரியை காவலில் எடுத்து விசாரிக்கும்போது மேலும் பல தகவல்கள் கிடைக்கும். அதையடுத்து ஆஸ்திரேலியாவிலுள்ள அவரது மகளை புதுச்சேரி அழைத்து வந்து விசாரிக்கவும் உள்ளோம்" என்று குறிப்பிட்டனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
7 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago