கல்வி நிறுவனங்களுக்கு அருகில் புகையிலை விற்பனை: சென்னையில் ஒரே நாளில் 21 வழக்குகள் பதிவு

By செய்திப்பிரிவு

சென்னை: கல்வி நிறுவனங்களுக்கு அருகில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்வது தொடர்பாக சென்னையில் ஒரே நாளில் 21 வழக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் போதைத் தடுப்புக்கான நடவடிக்கை (Drive against Drugs) , புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை (Drive Against Banned Tobacco Products) ஆகிய சிறப்பு சோதனைகள் மூலம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலை பொருட்களை ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன்படி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், கூடுதல் காவல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் 15-ம் தேதி பள்ளி, கல்லூரி உட்பட கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர இடங்களில் ஒரு நாள் சிறப்பு தணிக்கைகள் மேற்கொண்டனர்.

இச்சோதனையில், பள்ளி, கல்லூரி உட்பட கல்வி நிறுவனங்களுக்கு அருகில் கஞ்சா வைத்திருந்தது தொடர்பாக 1 வழக்கு பதிவு செய்யப்பட்டு, 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதர இடங்களில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1.41 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், பள்ளி, கல்லூரி உட்பட கல்வி நிறுவனங்களுக்கு அருகில் குட்கா புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்தது தொடர்பாக, 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 20 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, 19 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் 134 சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதர இடங்களில் குட்கா பாக்கெட்டுகள் விற்பனை செய்தது தொடர்பாக 94 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 94 நபர்கள் கைது செய்யப்பட்டு, 23 கிலோ கஞ்சா, 210 சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் ரூ.3,660/- பறிமுதல் செய்யப்பட்டது.

குட்கா புகையிலை பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக மொத்தம் 113 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 113 நபர்கள் கைது செய்யப்பட்டு, 42 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்டுகள், 346 சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் பணம் ரூ.3,660/- பறிமுதல் செய்யப்பட்டது.

எனவே, சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து கஞ்சா மற்றும் குட்கா புகையிலை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனைகள் மேற்கொண்டு, இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பார்கள் என்று காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

13 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

மேலும்