புதுச்சேரியில் போலீஸ்காரரின் தாயை தாக்கி நகை பறிப்பு

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: போலீஸ்காரரின் தாயை தாக்கி நகை பறித்த சென்றவரை போலீஸார் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தில் மூதாட்டியின் கழுத்து நரம்பு அறுபட்டு தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது.

புதுச்சேரி அரியாங்குப்பம் ஆர்கே நகர் கம்பன் வீதியை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி பழனியம்மாள் (வயது 75). இவரது நான்கு குழந்தைகளும் திருமணமாகி தனித்தனியாக வசிக்கின்றனர். கோபால் இறந்த பிறகு, பழனியம்மாள் தனியாக வசித்து வருகிறார். அவர் கழுத்தில் இரட்டைவடம் சங்கிலி, வளையல், மற்றோரு தங்க சங்கிலி என சுமார் 8 பவுன் நகை அணிவது வழக்கம்.

பழனியம்மாள் வீட்டில் மரக்கதவு சரியில்லாமல் இருப்பதால் அதனை பூட்டாமல் சாத்தி வைத்துவிட்டு தூங்குவது வழக்கம். நேற்று அதுபோல கதவை சாத்திவைத்துவிட்டு படுத்து தூங்கியுள்ளார். நள்ளிரவி்ல் மர்ம நபர் ஒருவர் கதவை திறந்துக்கொண்டு நுழைந்துள்ளார். பழனியம்மாள் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துள்ளார்.

பழனியம்மாள் கத்த முயற்சிக்கும்போது அவரது வாயை மூடியுள்ளார். கழுத்தில் இருந்த சங்கிலியை பறிக்கும்போது, பழனியம்மாளின் கழுத்தை அது கிழித்து காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அவன் வளையல்களையும் கழற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளான்.

கழுத்தில் காயம் ஏற்பட்டதால் பழனியம்மாவால் பேச முடியவில்லை. அவர் செல்போன் மூலம் நள்ளிரவு தனது காவல்துறையில் பணிபுரியும் தனது மகன் ரவிக்கு போன் செய்துள்ளார். அவரால் பேச முடியவில்லை. தன் தாய் போன் செய்ததால் இரவு வீட்டுக்கு வந்தபோது பழனியம்மாள் கழுத்து மற்றும் கையில் காயங்களுடன் இருந்தார். சைகை மூலம் மர்ம நபர் நகை பறித்தது குறித்து கூறியுள்ளார்.

உடனே ரவி தனது தாயை புதுவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் பழனியம்மாளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அரியாங்குப்பம் போலீஸார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளியை தேடிவருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

2 hours ago

க்ரைம்

9 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

மேலும்