உதகை: நீலகிரி மாவட்டம் தேனாடுகம்பை அடுத்த அணிக்கொரை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (43). இவர், சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் சேரிங்கிராஸ் பகுதியில் அவரை ஒரு சிலர் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்து மயங்கி விழுந்துள்ளார். இதைத்தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு உதகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத், டிஎஸ்பி மகேஸ்வரன், ஆய்வாளர் பிலிப் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும், கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக உதகையை சேர்ந்த மோசின், ராஜ்குமார், அகிம், இர்சாத் ஆகிய 4 பேரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட ராஜ்குமாருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இல்லை என்றும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் ஒரு தரப்பினர் நேற்று முன்தினம் நள்ளிரவு உதகை மத்திய காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, இறந்தவரின் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை பகுதியில் நேற்று காலை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உதகை கோட்டாட்சியர் துரைசாமி, வட்டாட்சியர் ராஜசேகர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, இறந்தவரின் உடலை வாங்கிச் சென்றனர்.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட ராஜ்குமாருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இல்லை என்றும், அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும், மன நிலை பாதிக்கப்பட்டவரை அடித்துக் கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உதகை ஏ.டி.சி. அருகே இந்து அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் கூறும் போது, ‘விசாரணை மற்றும் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த பின்னரே, குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்’ என்றார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
2 hours ago
க்ரைம்
3 hours ago
க்ரைம்
19 hours ago
க்ரைம்
21 hours ago
க்ரைம்
21 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago