அரியலூர்: மாற்றுத்திறன் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த விவசாயிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த குண்டவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாதுரை மகன் செல்வகுமார்(33), விவசாயி. இவர், வாய் பேசமுடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளியான 25 வயது பெண்ணை 2019-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து, அந்தப் பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, செல்வகுமாரை கைது செய்தனர்.
அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நீதிபதி ஆனந்தன் நேற்று தீர்ப்பளித்தார். இதில், குற்றம்சாட்டப்பட்ட செல்வகுமாருக்கு ஆயுள் சிறை, பெண்ணை கடத்தியதற்காக ஓராண்டு சிறை மற்றும் ரூ.26,000 அபராதம் விதித்து, சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ம.ராஜா ஆஜரானார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago