புதுக்கோட்டை: சிறுமியைத் தாக்கி கொலை செய்த வழக்கில் தாய் உட்பட 3 பேரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் காசிப்பாளையத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி திவ்யா. இவர்களது மகள் கீர்த்தனா(3). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது மகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய திவ்யா, தனது நண்பரான கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஜெகனுடன் மதுரை மாவட்டம் அய்யூரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவுடன் இருந்த கீர்த்தனாவை விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திவ்யா, ஜெகன் ஆகியோர் அண்மையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கீர்த்தனா ஜுலை 6-ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து, குழந்தையின் சடலத்தைக்கூட பெறாமல், திவ்யா மற்றும் ஜெகன் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர்.
இதுகுறித்து, திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தஸ்தகிர், விராலிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில், சிறுமியிடம் ஜெகனின் நண்பர் பழனியப்பன் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதைப்பற்றி ஜெகனிடம் திவ்யா கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து, பழனியப்பனை ஊருக்கு அனுப்பிய ஜெகன், ஆத்திரத்தில் சிறுமி கீர்த்தனாவை தாக்கியுள்ளார். இதில், படுகாயம் அடைந்த கீர்த்தனாவை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, ஜெகன், திவ்யா மற்றும் பழனியப்பன் ஆகியோரை விராலிமலை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
22 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago