கத்தியைக் காட்டி மிரட்டி மூதாட்டியிடம் 11 பவுன் கொள்ளை: நங்கவள்ளி அருகே முகமூடி அணிந்த கும்பல் கைவரிசை

By செய்திப்பிரிவு

நங்கவள்ளி அருகே தனியாக இருந்த மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்த கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்து 11 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றது.

சேலம் மாவட்டம் நங்கவள்ளி அடுத்த குட்டப்பட்டி புதூர் நான்கு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ருக்மணி (80). இவரின் கணவர் முத்துகவுண்டர். இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். இவர்களுக்கு 3 மகன், ஒரு மகள் உள்ளனர். ருக்மணி தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டின் கதவை திறந்து வைத்தபடி ருக்குமணி உறங்கினார். நேற்று அதிகாலை 2 மணி அளவில் ருக்குமணியின் வீட்டுக்குள் முகமூடி அணிந்த இருவர் சென்றனர். அவர்களின் சத்தம் கேட்டு எழுந்த ருக்மணி கூச்சலிடவே, மர்ம நபர்கள் அவரின் வாயை அழுத்தி பிடித்து கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த 2 பவுன் தோடு, பீரோவில் வைத்திருந்த 6 பவுன் சங்கிலி, 3 பவுன் செயின் உள்ளிட்ட 11 பவுன் நகையை பறித்தனர். அப்போது வெளியில் இருவர் இருசக்கர வாகனத்தில் நின்றிருந்தனர். பின்னர் 4 பேரும் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பினர். தகவல் அறிந்து அங்கு சென்ற நங்கவள்ளி போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும்,

மோப்ப நாய் லல்லி வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது. கைரேகை நிபுணர்கள் வீட்டில் உள்ள குற்றவாளிகளின் ரேகை பதிவுகளை சேகரித்தனர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

சங்ககிரியில் 12 பவுன் திருட்டு

சங்ககிரி அடுத்த மாவெலிபாளையம் தோப்புக் காட்டைச் சேர்ந்தவர் லாரி அதிபர் வெங்கடேஸ்வரன் (31). இவர் வெளியூர் சென்ற நிலையில், நேற்று முன்தினம் வெங்கடேஸ்வரனின் மனைவி மீனாட்சி தனது 3 வயது மகனுடன் வீட்டின் உள்ளேயும், வெங்கடேஸ்வரனின் தாய் வளர்மதி வீட்டின் வெளியிலும் படுத்து உறங்கினர்.

அப்போது, வளர்மதியின் தலையணையின் அடியில் இருந்த சாவியை எடுத்த மர்ம நபர்கள் வீட்டை திருந்து உள்ளே சென்று, வீட்டில் இருந்து 12 பவுன் நகை மற்றும் ரூ.4 லட்சத்தை திருடி சென்றனர்.

இதுதொடர்பான புகாரின் பேரில், சங்ககிரி டிஎஸ்பி ஆரோக்கியராஜ், இன்ஸ்பெக்டர் தேவி தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

11 days ago

மேலும்