தஞ்சாவூரில் போதையில் வியாபாரிகளை தாக்கிய மேலும் 4 சிறுவர்கள் கைது

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பாக, போதையில் 5 சிறுவர்கள் 2 வியாபாரிகளை தாக்கி, செல்போனை பறித்துச் சென்றனர்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்த புகாரின்பேரில் தஞ்சாவூர் மேற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தஞ்சாவூர் சேவப்பநாயக்கன்வாரி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை 3 தினங்களுக்கு முன் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் பேரில், மற்ற 4 சிறுவர்களை போலீஸார் தேடி வந்தனர். இதைத் தொடர்ந்து நேற்று சீனிவாசபுரம் செக்கடி தெருவைச் சேர்ந்த 16 வயது முதல் 18 வயதுடைய 4 சிறுவர்களை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் கஞ்சாவுடன், மருந்துக் கடையில் ஒரு சில மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு, போதையில் வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் இதுபோன்ற மாத்திரைகளை விற்பனை செய்யக் கூடாது என மருந்துக் கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

14 days ago

க்ரைம்

14 days ago

மேலும்