கேளம்பாக்கம்: ஓடிபியை சொல்வதற்கு தாமதம் ஆனதால் ஏற்பட்ட தகராறில் மனைவி, குழந்தைகளின் கண் முன்னே ஐடி ஊழியரை தனியார் கால் டாக்ஸி ஓட்டுநர் அடித்துக் கொலை செய்த சம்பவம் கேளம்பாக்கம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து தப்பி ஓட முயன்ற கார் ஓட்டுநரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அந்த நபரை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடுவாஞ்சேரி அடுத்த கன்னிவாக்கம் கிராமம், குந்தன் நகரைச் சேர்ந்தவர் உமேந்தர் (33). கோயம்புத்தூரில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வந்தார். 2 நாள் விடுமுறைக்காக சனிக்கிழமை காலை வீட்டுக்கு வந்துள்ளார்.
நேற்று முன்தினம் குடும்பத்துடன் சினிமா பார்ப்பதற்காக மனைவி பவ்யா, அவரது சகோதரி தேவிப்பிரியா மற்றும் குழந்தைகள் உட்பட 7 பேர் தனியார் கால் டாக்ஸி மூலம் ஓஎம்ஆரில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு சென்றுள்ளனர்.
அங்கு படம் பார்த்துவிட்டு வீடு திரும்புவதற்காக தேவிப்பிரியாவின் செல்போனில் இருந்து கார் புக்கிங் செய்துள்ளனர். சிறிது நேரத்தில் கார் வந்தது. சேலம் அடுத்த ஆத்தூர், வ.உ.சி. நகரைச் சேர்ந்த ரவி என்பவர் காரை ஓட்டி வந்துள்ளார். அனைவரும் காரில் ஏறியுள்ளனர்.
பின்னர் ஓட்டுநர் ரவி ஓடிபி எண்ணை கேட்டுள்ளார். அப்போது செல்போன் எஸ்எம்எஸில் தேவிப்பிரியா தேடியுள்ளார். அதற்குள் பொறுமை இல்லாத ஓட்டுநர் ரவி கோபமடைந்து ஓடிபி வரவில்லை என்றால் காரை விட்டு இறங்குமாறு கூறியுள்ளார். அதற்கு இறங்க முடியாது என்று உமேந்தரும் உடன் வந்தவர்களும் கூறியதாகக் கூறப்படுகிறது.
இதனால் பயணிகளுக்கும் ஓட்டுநருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. இதில் உமேந்திரை ஓட்டுநர் ரவி கடுமையாக தாக்கியதில் அவர் மயக்கமடைந்தார்.
உடனே அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பினர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும், தப்பி ஓட முயன்ற ஓட்டுநர் ரவியை அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் பிடித்து போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு விரைந்த கேளம்பாக்கம் போலீஸார் ஓட்டுநரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 hour ago
க்ரைம்
2 hours ago
க்ரைம்
18 hours ago
க்ரைம்
20 hours ago
க்ரைம்
20 hours ago
க்ரைம்
23 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago