கடன் தொல்லை காரணமாக கேரளாவைச் சேர்ந்த தம்பதி பழநியில் உள்ள தனியார் விடுதி யில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் ஆலந்தூரைச் சேர்ந்தவர் சுகுமாரன். இவரது மனைவி சத்தியபாமா. இவர்கள் பழநி அடிவாரத்தில் உள்ள தனியார் விடுதியில் இரு நாட்களுக்கு முன்பு வந்து தங்கினர். சுவாமி தரிசனம் செய்ய வந்ததாகக் கூறி அறை எடுத்து தங்கியுள்ளனர்.
இந்நிலையில், இந்த விடுதிக்கு கேரளாவைச் சேர்ந்த சிலர் நேற்று முன்தினம் நள்ளிரவு அழுதவாறு வந்தனர். இதுகுறித்து விடுதி ஊழியர்கள் கேட்டபோது, விடுதியில் தங்கியுள்ள கணவன், மனைவியான சுகுமாறன், சத்ய பாமா இருவரும் தங்களது உற வினர்கள் என்றும், அவர்கள் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வாட்ஸ் ஆப் மூலம் தகவல் அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து விடுதி ஊழியர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் முன்னி லையில் அறை திறக்கப்பட்டது. அப்போது கணவன், மனைவி இருவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தங்களது இறப்புக்கு யாரும் காரணம் இல்லை. வங்கி கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொள்வதாக மலையாளத்தில் எழுதி வைத்த கடிதம் ஒன்றை போலீஸார் கைப்பற்றினர். பழநி அடிவாரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
7 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago