ஆந்திர மாநிலத்தில் ரூ.1.3 கோடி மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் அழிப்பு

By செய்திப்பிரிவு

சித்தூர்: ஆந்திர மாநிலத்தில், சட்டவிரோதமாக வெளி மாநிலங்களில் இருந்து ஆந்திராவுக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 1 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள சுமார் 1 லட்சம் மதுபான பாட்டில்களை நேற்று சித்தூர் போலீஸார் ரோட் ரோலர் மூலம் அழித்தனர்.

ஆந்திர மாநில கலால் துறையினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து எல்லைகளில் கடந்த ஓராண்டாக வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். இதில் சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட ரூ. 1 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள சுமார் 1 லட்சம் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை நேற்று சித்தூர் மாவட்ட எஸ்பி ரிஷாந்த் ரெட்டி முன்னிலையில் காணிப்பாக்கம் ஐடிஐ அருகே சாலையில் கொட்டி, ரோட் ரோலர் மூலம் அழித்தனர்.

இது குறித்து எஸ்.பி. ரிஷாந்த் ரெட்டி கூறும்போது, “அண்டை மாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக ஆந்திராவிற்கு கொண்டு வரும் விலை குறைவான மதுபான பாட்டில்கள் இங்கு கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அரசுக்கு அதிகமாக நஷ்டம் ஏற்படுகிறது. இது தொடர்பாக கடந்த ஓராண்டில் சித்தூர் வட்டார போலீஸ் நிலையங்களில் மட்டும் 400 வழக்குகள் பதிவாயின. இதில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் ஒரு லட்சம் மதுபான பாட்டில்கள் சாலையில் கொட்டி அழிக்கப்பட்டன. இதுபோன்று சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது இனி குண்டர் சட்டம் பாயும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

14 days ago

க்ரைம்

14 days ago

மேலும்