திருப்பத்தூர் | மூதாட்டி கொலை வழக்கில் மருமகள் உட்பட 3 பேர் கைது

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த செவ்வாத்துார் புதூர் காலனியைச் சேர்ந்தவர் செல்வ ராஜ் (66). இவரது மனைவி ராமரோஜா (58). இவர், 30-ம் தேதி காலை வீட்டு திண்ணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கத்தாலி சரடு மாயமாகியிருந்தது.

இது குறித்து வந்த தக வலின் பேரில் கந்திலி காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ராமரோஜா உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து செல்வராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் கந்திலி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், மருமகள் அம்சா மீது காவல் துறையினருக்கு சந்தேகம் எழுந்தது. உடனே, அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது, தனது மாமியாரை திட்டமிட்டு கொலை செய்ததாக அம்சா வாக்குமூலம் அளித்தாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

மாமியார் கண்டிப்பு

இது குறித்த காவல் துறையினர் கூறும்போது, ‘‘அம்சாவுக்கு திருமணத்துக்கு முன்பே, பெரிய குனிச்சியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் கட்டிட தொழிலாளியான கார்த்தி கேயன்(21) என்பவருடன் காதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த காதலை ஏற்காத அம்சாவின் பெற்றோர் ஏழுமலைக்கு திருமணம் செய்து வைத்தனர்.

திருமணத்துக்கு பிறகும் அம்சா தனது காதலன் கார்த்திகேயனுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இவர்களது கூடா நட்பை அறிந்த ராமரோஜா தனது மருமகள் அம்சாவை கண்டித்துள்ளார்.

மேலும், கார்த்திகேயனுடன் நெருங்கி பழுவதை தனது மகன் ஏழுமலையிடம் சொல்லி விடுவேன் என அம்சாவை எச்சரித்துள்ளார். இதை தனது காதலன் கார்த்திகேயனிடம் அம்சா தெரிவித்துள்ளார்.

இதனால், ராமரோஜாவை கொலை செய்ய அம்சாவும், கார்த்திகேயனும் திட்டமிட்டனர். அதற்காக பலமுறை அவர்கள் முயற்சி எடுத்தனர்.

இறுதியாக, கடந்த 29-ம் தேதி இரவு 11 மணிக்கு ராமரோஜா, வீட்டின் வெளியே தனியாக திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்ததை அறிந்த அம்சா தனது காதலனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து வீட்டுக்கு அழைத்தார்.

அதன்படி, கார்த்திகேயன் மற்றும் அவரது 17 வயது சகோ தரனை (தற்போது பிளஸ்2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்) அழைத்துக் கொண்டு அம்சா வீட்டுக்கு வந்தார். அப்போது, ஆழ்ந்த உறக்கத்திலிருந்த ராம ரோஜாவை, அம்சா உள்ளிட்ட மூன்று பேரும் ஒன்று சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, அவரது கழுத்தில் இருந்த தங்கத்தாலி சரடை அறுத்துக்கொண்டு நகைக்காக கொலை நடந்ததாக நாடகமாடி அக்கம், பக்கத்தினரை அம்சா ஏமாற்றியுள்ளார்.

சிறையில் அடைப்பு

அம்சாவின் செல்போனில் வந்த அழைப்புகள் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கொலை சம்பவத்தை அம்சா காவல் துறையினர் முன்பு வாக்குமூலமாக தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் அம்சா மற்றும் அவரது காதலன் கார்த்திகேயன், அவரது 17 வயது சகோதரர் என 3 பேர் கைது செய்யப்பட்டு திருப்பத்துார் ஜேஎம் 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அம்சாவும், கார்த்திகேயனும் வேலூர் மத்திய சிறையிலும், 17 வயது சிறுவன் வேலூர் சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளியில் அடைக் கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

3 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

மேலும்