புகையிலைப் பொருட்கள் விற்பனை: சேலத்தில் 10 கடைகளுக்கு ‘சீல்’

By செய்திப்பிரிவு

சேலம்: சேலத்தில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 10 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், இதுதொடர்பாக கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.

அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க சேலம் மாநகர போலீஸார் மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்காணித்தும், சோதனை நடத்தியும் சட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில், சிலர் மறைமுகமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

இதை தடுக்க சேலம் மாநகர போலீஸார் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையினரும் இணைந்து சட்டவிரோதப் பொருட்களை விற்பனை செய்த வழக்கில் சிக்கிய கடைகளுக்கு ‘சீல்’ வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த இரு நாட்களாக நடந்த சோதனையில் 10 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. ‘சீல்’ வைக்கப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் மீது நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத் தரவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

பட விளக்கம்

சேலம் தாதகாப்பட்டியில் உள்ள மளிகைக் கடையில் உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் மற்றும் மாநகர காவல் உதவி ஆணையர் அசோகன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

படம்: எஸ்.குரு பிரசாத்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

11 hours ago

க்ரைம்

12 hours ago

க்ரைம்

16 hours ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

மேலும்