திருவண்ணாமலை: தண்டராம்பட்டு அருகே நடந்த கருக் கலைப்பு முயற்சியில் 15 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வசித்த 15 வயது சிறுமி ஒருவர், 10-ம் வகுப்பு பயின்று வந்தார். இவரை, அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பவர் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துசென்று வந்துள்ளார். இதனால், இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். இதில், சிறுமி 4 மாத கர்ப்பமாக இருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 27-ம் தேதி முருகனின் நண்பரான பிரபு என்பவர் சிறுமியை, ரெட்டியார்பாளையத்தில் உள்ள போலி பெண் மருத்துவரான காந்தி என்பவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, சிறுமிக்கு கருக் கலைப்பு மாத்திரையை காந்தி கொடுத்துள்ளார். சிறுமிக்கு ஊசியும் செலுத்தப்பட்டதாக தெரிகிறது. பின்னர், அங்கிருந்து புறப்பட்டு சிறிது தொலைவு வந்த சிறுமி மயக்கமடைந்தார்.
இதையறிந்த சிறுமியின் உறவினர்கள் தானிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து பிரேதப் பரிசோதனைக்காக, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறுமியின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் தானிப்பாடி போலீஸார் போக்சோ சட்டம் உட்பட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து முருகன், அவரது நண்பர் பிரபு மற்றும் போலி பெண் மருத்துவர் காந்தி ஆகியோரை கைது செய்துள்ளனர். இதற்கிடையில், காந்தியின் வீட்டில் மருத்துவக் குழுவினர் சோதனை நடத்தி, அங்கிருந்த ஊசி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
2 hours ago
க்ரைம்
3 hours ago
க்ரைம்
19 hours ago
க்ரைம்
21 hours ago
க்ரைம்
21 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago