சென்னை | தந்தையின் கையை வெட்டிய ரவுடியை கொலை செய்த மகன்கள்: 5 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை

By செய்திப்பிரிவு

சென்னை: தந்தையின் கையை வெட்டிய ரவுடியை, 21 ஆண்டுகளுக்கு பின்னர் மகன்கள் பழி தீர்த்துள்ளனர். இந்த கொலை தொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை, புளியந்தோப்பு, டாக்டர் அன்சாரி 5-வது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் என்ற ஆலி சுரேஷ் (49). இவர் நேற்று முன்தினம் இரவு புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை வழி மறித்த கும்பல், கத்தியால் தாக்கிக் கொலை செய்து விட்டு தப்பியது.

தகவல் அறிந்த புளியந்தோப்பு காவல் நிலைய போலீஸார் சுரேஷ் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து கொலையாளிகளை கைது செய்ய வட சென்னை காவல் இணை ஆணையர் ரம்யா பாரதி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீஸார், கொலை தொடர்பாக திருவல்லிக்கேணி டாக்டர் நடேசன் சாலை, வெங்கடசாமி தெருவைச் சேர்ந்த சதீஷ் என்ற பில்லா சதீஷ் (27). இவரது தம்பிகள் முரளி (25), தினேஷ் (22), இவர்களது தந்தை கிருஷ்ணன் என்ற சின்னா (49) மற்றும் கூட்டாளி திருவல்லிக்கேணி ராம் நகரைச் சேர்ந்த பிரகாஷ் என்ற முகேஷ் (23) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கொலைக்கான காரணம்

தற்போது கைது செய்யப்பட்டுள்ள கிருஷ்ணனை, இறந்துபோன ஆலி சுரேஷ் மற்றும் சிலர் 2001-ம் ஆண்டு பேசின் பாலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வைத்து கத்தியால் தாக்கி பலத்த காயத்தை ஏற்படுத்தினர். இது தொடர்பாக ஏற்கெனவே இரு தரப்பினருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளளது.

இந்நிலையில், கிருஷ்ணனின் 2-வது மகன் முரளி, புளியந்தோப்பு பகுதியில் உள்ள அவரது பாட்டியின் வீட்டுக்கு அவ்வப்போது வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்போது சுரேஷ், முரளியை கிண்டல் செய்ததோடு மட்டும் அல்லாமல், ‘உன் தந்தையின் நிலைதான் உனக்கும், உனது சகோதரர்களுக்கும்’ என மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் அண்மையில் கிருஷ்ணனின் மகன்களுக்கு எதிராக சுரேஷ் செயல்பட்டதாக தெரிகிறது.

இது போன்ற செயல்களால் கோபமடைந்த கிருஷ்ணன் மற்றும் அவரது மகன்கள் சதீஷ், முரளி, தினேஷ் ஆகியோர் நண்பர் பிரகாஷ் என்பவருடன் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

15 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

மேலும்