அரக்கோணம்: அரக்கோணம் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 30 பவுன் தங்க நகைகள், வெள்ளிப்பொருட்களை திருடிச் சென்ற மர்மநபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தணிகை போளூர் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் பக்தவச்சலம் (60). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கோகிலா (57). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பெங்களூருவில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கோகிலாவுக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் சரியில் லாததால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை எடுக்க எண்ணிய பக்தவச்சலம் தனது மனைவியை அழைத்துக்கொண்டு வீட்டை பூட்டிவிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரு சென்றார்.
இந்நிலையில், நேற்று காலை பக்தவச்சலத்தின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்ட அக்கம், பக்கத்தினர் உடனடியாக அரக்கோணம் கிராமிய காவல் நிலையத்துக்கும், பெங்களூருவில் உள்ள பக்தவச்சலத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், அரக்கோணம் கிராமிய காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்திய போது, பக்தவச்சலம் வீட்டில் ஆளில்லாததை அறிந்துக் கொண்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் பின்பக்க வாசல் வழியாக உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 30 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளிப்பொருட்களை திருடிச்சென்றுள்ளது தெரிய வந்தது.
இது குறித்து அரக்கோணம் கிராமிய காவல் நிலையத்தில் பக்தவச்சலம் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
14 days ago
க்ரைம்
14 days ago