புதுச்சேரி: புதுச்சேரி லூயிபிரகாசம் வீதியைச் சேர்ந்தவர் தேவநாதன் (49). இவர் பாரதி வீதியில் சொந்தமாக நகைக்கடை வைத்துள்ளார். இவரது கடையில் கடந்த ஓராண்டாக கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த விக்னேஷ் மனைவி திவ்யா (27) வேலை செய்து வந்தார்.
அப்போது அங்கிருந்த நகைகளை சுத்தம் செய்வதுபோல சிறிது சிறிதாக எடுத்து, அதனை பேப்பரில் சுற்றி வெளியே வீசுவதுபோல வீசி, வீட்டுக்கு செல்லும்போது எடுத்துச் சென்றதாகவும், சுடிதார் துப்பட்டாவில் மறைத்தும் திருடிச் சென்றுள்ளார். திருடிய நகைகளை தனது கணவரிடம் கொடுத்து அடமானம் வைத்து குடும்ப செலவுகளை பார்த்ததாகத் தெரிகிறது.
அண்மையில் தேவநாதன் நகைகளை சரிபார்த்தபோது 12 பவுன் நகைகள், 400 கிராம் வெள்ளி பொருட்களும் குறைந்தது தெரியவந்தது. பின்னர் கடையின் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, திவ்யா நூதனமாக நகைகளை திருடியதை கண்டறிந்தார்.
தொடர்ந்து விசாரித்ததில், திவ்யா நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டு, அடமானம் வைத்துள்ள அனைத்து நகைகளையும் திருப்பி கொடுத்து விடுவதாக கூறியுள்ளார். இதுகுறித்து தேவநாதன் பெரியகடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் திவ்யா, விக்னேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
14 hours ago
க்ரைம்
15 hours ago
க்ரைம்
15 hours ago
க்ரைம்
19 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago