கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த புரசம்பட்டியைச் சேர்ந்தவர் சேகர்(25). பொக்லைன் ஆபரேட்டர். இவர் 2018 ஜன.15-ம் தேதி13 வயது சிறுமிக்கு பிறந்த நாள் பரிசு வாங்கிக் கொடுத்ததுடன், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அதன்பின், அந்த சிறுமி வற்புறுத்தியதைத் தொடர்ந்து, 2018 ஏப்.2-ம் தேதி அவரை சேகர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அதன்பின் வெளிநாடு சென்றுவிட்டு 2020-ல் ஊர் திரும்பிய சேகர், அதே ஊரைச் சேர்ந்த வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து அந்தச் சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில், குளித்தலை அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ, சிறார் திருமண தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து சேகரைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.நசீமாபானு, குற்றம் சாட்டப்பட்ட சேகருக்கு, போக்ஸோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, சிறுமியைக் கடத்தியதற்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 2 பிரிவுகளிலும் தலா ரூ.1,000 அபராதமும், அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனை மற்றும் சிறார் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.1,000 அபராதம், அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கி, தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
2 hours ago
க்ரைம்
3 hours ago
க்ரைம்
6 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago