பெங்களூரு: கர்நாடக மாநிலம் கலபுர்கி மாவட்டம் அஃப்சல்பூர் அருகிலுள்ள தேவலக்னாபூர் தத்தாரேயா கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. சில அர்ச்சகர்கள் கோயில் பெயரில் 5 போலி இணையதளங்களை தொடங்கி, ஆன்லைனில் பூஜை, சிறப்பு வழிபாடு செய்வதற்காக பக்தர்களிடம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கட்டணம் வசூலித்துள்ளனர். இதுதவிர கோயிலுக்கு நிதியுதவி, அன்னதானம், சிறப்பு யாகம் ஆகியவற்றுக்கு கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பரிந்துரைக்காமல், தங்களது இணையதளத்தை பரிந்துரைத்துள்ளனர். அதன் மூலமாக ஏராளமானோரிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்துள்ளனர். இதுகுறித்து கர்நாடக இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்ததை தொடர்ந்து அதிகாரிகள் விசாரணையில் இறங்கினர்.
இதையடுத்து அறநிலையத்துறை இணை ஆணையர் யஷ்வந்த் குருகர் கூறும்போது, ' 7 ஆண்டுகளாக கோயில் பேரில் 8 போலி இணையதளங்கள் நடத்தி ரூ.20 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. இதில் 5-க்கும் மேற்பட்ட அர்ச்சகர்களுக்கு தொடர்பு இருக்கிறது. இதுகுறித்து போலீஸார் 3 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.முதல் கட்ட விசாரணையில் இந்த மோசடியில் வல்லப் பூஜாரி, அன்குர் பூஜாரி, பிரதிக் பூஜாரி, கங்காதர் பூஜாரி, சரத் பட் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. தலைமறைவாகியுள்ள இவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது'' என்றார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
14 days ago
க்ரைம்
14 days ago