மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல்நிலைய தூய்மைப் பணியாளர் மதுரை நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ். இவர்களை 2020 ஜூன் மாதம் போலீஸார் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.
பின்னர் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் தர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உட்பட 9 பேரை சிபிஐ கைது செய்தது.
இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலெட்சுமி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் காவல் ஆய்வாளர் தர் உட்பட 9 பேரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கில் 73-வது சாட்சியாகச் சேர்க்கப்பட்டுள்ள சாத்தான்குளம் காவல்நிலைய தூய்மைப் பணியாளர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியளி த்தார்.
அவர் தந்தை, மகனிடம் போலீஸார் விசாரணை நடத்திய பிறகு காவல் நிலையத்தில் படிந்திருந்த ரத்தக்கறையைச் சுத்தம் செய்தது தொடர்பாக நீதிபதியிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அடுத்த விசாரணையை ஜூலை 1-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
11 hours ago
க்ரைம்
13 hours ago
க்ரைம்
16 hours ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago