தஞ்சாவூர்: தஞ்சாவூர் கீழவாசல் ஆட்டுமந்தைத் தெருவைச் சேர்ந்தவர் மனோகரன்(30). கூலித் தொழிலாளியான இவர் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
கடந்த 2 நாட்களுக்கு முன் 3 பேர் மனோகரன் வீட்டுக்கு வந்து, அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றனர். அதன்பிறகு மனோகரன் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மனோகரனின் தாய் வாசுகி அளித்த புகாரின் பேரில் தஞ்சாவூர் மேற்கு போலீஸார் விசாரித்து வந்தனர்.
இந்தநிலையில், தஞ்சாவூரை அடுத்த கண்டிதம்பட்டு வெட்டிக்காடு பிரிவு பாலம் அருகே கல்லணைக் கால்வாயில், கத்திக்குத்து காயங்களுடன் மனோகரன் இறந்து கிடந்தது நேற்று காலை தெரிய வந்தது.
இதையடுத்து, தஞ்சாவூர் மேற்கு போலீஸார் அங்கு சென்று மனோகரனின் சடலத்தை எடுத்து தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வாசுகி அளித்த புகாரின் பேரில் ஏற்கெனவே கடத்தல் வழக்குப் பதிவு செய்திருந்த போலீஸார், தற்போது அதை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீதிமன்றத்தில் 3 பேர் சரண்
இதனிடையே, இந்தக் கொலை தொடர்பாக தஞ்சாவூர் செக்கடி சீனிவாசபுரத்தைச் சேர்ந்த கே.மணிகண்டன்(34), கே.கிரண்(26), கே.கண்ணன்(24) ஆகிய 3 பேர், பாபநாசம் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
3 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago