வேலூர்: வேலூர் அருகே நடந்து சென்று கொண்டிருந்த அரசு ஐ.டி.ஐ ஆசிரியை கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சென்னையைச் சேர்ந்த மாதினி (56) என்பவர் வேலூர் அடுத்த அப்துல்லாபுரத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ) ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இதற்காக, மேல்மொணவூர் அம்மன் நகரில் வாடகை வீட்டில் தங்கியுள்ளார். அங்கிருந்து வேலைக்கு சென்று வருகிறார். இவர் வழக்கம்போல் நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு பணி முடிந்த பிறகு தேசிய நெடுஞ்சாலை வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண் டிருந்தார்.
அப்போது, அவரை பின் தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்த நேரத்தில் மாதினி அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர். இது தொடர்பாக விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தில் மாதினி அளித்த புகாரின்பேரில் மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
14 days ago
க்ரைம்
14 days ago