ஜோலார்பேட்டை | ரயிலில் கஞ்சா கடத்திய இருவர் கைது

By செய்திப்பிரிவு

ஜோலார்பேட்டை: ரயிலில் கஞ்சா கடத்திய ஒடிசா மாநில இளைஞர்களை ரயில்வே காவல் துறையினர் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வழியாக செல்லும் ஒரு சில ரயில்கள் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில், ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் ஜோலார்பேட்டை வழியாக செல்லும் அனைத்து ரயில்களிலும் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, தன்பாத்தில் இருந்து ஆலப்புழா வரை செல்லும் விரைவு ரயிலில் சோதனை மேற்கொண்ட போது, பொது வகுப்புப்பெட்டியில் பயணம் செய்த இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பூபதி பூசன் மகாகுட்(23) மற்றும் கார்டிக் பாய்(20).என்பதும், இவர்கள் இருவரும் ஒடிசா மாநிலம் பிலாஸ்பூரைச் சேர்ந்தவர்கள் என்பதும், ரயில் மூலம் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது. இதையடுத்து, 2 பேர் மீதும் ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், அவர்களிடம் இருந்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

க்ரைம்

16 hours ago

க்ரைம்

17 hours ago

க்ரைம்

21 hours ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

12 days ago

மேலும்