கடலூர்: சிதம்பரத்தில் அடுத்தடுத்த 3 கடைகளை உடைத்து, பணம் மற்றும் மொபைல் போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
சிதம்பரம் தொப்பையன் தெருவைச் சேர்ந்தவர் சுதாகர்(48). இவர், சிதம்பரம் வடக்கு மெயின் ரோட்டில் மொபைல் கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை மூடி விட்டுச் சென்றார். நேற்று காலை கடையை திறக்க வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.1 லட்சம் பணம், 7 விலையுயர்ந்த மொபைல் போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தனர்.
மேலும், இக்கடையின் அருகில் உள்ள நொச்சிக்காடு பகுதியைச் சேர்ந்த பாஸ்கரின் நாட்டு மருந்து கடை பூட்டையும் உடைத்து, கல்லாவில் இருந்த ரூ. 12 ஆயிரம் மற்றும் அக்கடையை அடுத்துள்ள தனியார் டெலிகாம் நிறுவன ஷோரூம் கடையை உடைத்து கல்லாவில் இருந்து ரூ. 10ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
தகவலறிந்த சிதம்பரம் நகர இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவுகள் சேகரிக்கப்பட்டது. திருடு போன பணம் மற்றும் பொருட்களின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
2 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
14 days ago