இந்து முன்னணி நிர்வாகி கொலை தொடர்பாக கோவில்பட்டி நீதிமன்றத்தில் இளைஞர் சரண்

By செய்திப்பிரிவு

கோவில்பட்டி: உடுமலைப்பேட்டையில் நடந்த இந்துமுன்னணி நிர்வாகி கொலை வழக்குதொடர்பாக கோவில்பட்டி நீதிமன்றத்தில் திருநெல்வேலி இளைஞர் சரணடைந்தார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஏரிப்பாளையத்தைச் சேர்ந்தவர் குமரவேல்(30). இந்து முன்னணி வடக்கு நகர செயலாளராக இருந்த இவர், கடந்த மாதம் 22-ம் தேதிகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக உடுமலைப்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இந்த கொலையில் தொடர்புடையதாக கூறப்படும் பாளையங்கோட்டை எம்.கே.பி.நகர் உலகம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (36) என்பவர் நேற்று கோவில்பட்டி குற்றவியல் 1-வது நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

ரஞ்சித்குமாரை காவலில் வைக்க நீதிபதி கடற்கரைச் செல்வம் உத்தரவிட்டதை தொடர்ந்து, அவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீஸார் அடைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

21 hours ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

மேலும்