இலங்கைக்கு கடத்த முயன்ற 1,700 கிலோ பீடி இலைகள் பறிமுதல்: கியூ பிரிவு போலீஸார் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1,700 கிலோ பீடி இலைகளை கியூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்

தூத்துக்குடி தருவைகுளம் அருகே உள்ள கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலை கடத்தப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ஆய்வாளர் விஜயஅனிதா தலைமையில் போலீஸார் நேற்று ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, போலீஸாரை பார்த்ததும் கடற்கரையில் இருந்த ஒரு படகு வேகமாக கடலுக்குள் புறப்பட்டு சென்றது.

இதையடுத்து போலீஸார் மீனவர்களின் உதவியுடன் அந்த படகை விரட்டி சென்றனர்.அந்த படகில் இருந்தவர்கள், மூட்டைகளை தூக்கி கடலில் வீசினர். பின்னர் அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்று விட்டனர்.

போலீஸார் கடலில் மிதந்த 38 மூட்டைகளை சேகரித்தனர். ஒவ்வொரு மூட்டையிலும் சுமார் 45 கிலோ எடை வீதம் மொத்தம் 1,700 கிலோ பீடி இலைகள் இருந்தன. இதன் இலங்கை மதிப்பு சுமார் ரூ.17 லட்சம் என்று கூறப்படுகிறது.

பீடி இலை மூட்டைகளை கடத்த முயன்றவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

11 mins ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

14 days ago

மேலும்