சிவகங்கையில் அடுத் தடுத்து 3 கோயில்களில் திருட்டு நடந்துள்ளது. மாவட்டம்முழுவதும் கடந்த 3 மாதங்களில் 20 கோயில்களில் திருட்டு நடந்துள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சிவகங்கை முதலியார் தெருவில் உள்ள சந்தன மாரியம்மன் கோயில், வேலாயுதசாமி கோயில் தெருவில் உள்ள விநாயகர் கோயில், கல்லூரிச் சாலையில் உள்ள காத்தாயி அம்மன் கோயில் ஆகிய 3 கோயில்களில் நேற்று முன்தினம் இரவு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியல்களைத் திருடிச் சென்றனர்.
இந்த 3 கோயில்களின் உண்டியல்களிலும் ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை காணிக்கைப் பணம் இருந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். நகரின் மையப் பகுதிகளில் உள்ள 3 கோயில்களில் அடுத்தடுத்து திருட்டு நடந்துள்ளது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட் டத்தில் கடந்த சில நாட்களாக கோயில்களைக் குறிவைத்து ஒரு கும்பல் தொடர்ந்து திருடி வருகிறது.
சிவகங்கை அருகே காஞ்சிரங்காலில் ஒரு கோயில், சோழபுரத்தில் 3 கோயில்கள், இடையமேலூர் பகுதியில் ஒரு கோயில், சிங்கம்புணரி பகுதியில் 3 கோயில்கள், திருப்பத்தூர் அருகே மகிபாலன்பட்டியில் உள்ள கோயில், அதேபோல் தேவகோட்டை, காரைக்குடி பகுதிகளிலும் சில கோயில்களில் திருட்டு நடந்துள்ளன.
மாவட்டம் முழுவதும் கடந்த 3 மாதங்களில் 20 கோயில்களுக்கு மேல் திருட்டு நடந் துள்ளன. ஆனால், இதில் பெரும்பாலான வழக்குகளில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் போலீ ஸார் திணறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
8 hours ago
க்ரைம்
15 hours ago
க்ரைம்
22 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago