சென்னை | ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.20 லட்சம் இழந்த பெயின்டர் தற்கொலை

By செய்திப்பிரிவு

சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாடி ரூ.20 லட்சத்தை இழந்த பெயின்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த பலர்தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து, இந்த விளையாட்டை நிரந்தரமாக தடை செய்யவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்நிலையில், மணலியில் மீண்டும் இது போன்றதொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதன் குறித்த விவரம் வருமாறு:

சென்னையை அடுத்த மணலி, அறிஞர் அண்ணா முதல் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன் (37). இவர் வீடு, அலுவலகங்களுக்கு மொத்தமாக கான்ட்ராக்ட் எடுத்து பெயின்ட் பூசு பணி செய்து வந்தார். இவருக்கு மனைவியும், 2 ஆண் பிள்ளைகளும் உள்ளனர்.

நகைகள் அடகு

சில மாதங்களாக இவருக்கு ஆன்லைன் ரம்மி விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டு தீவிரமாக விளையாடி உள்ளார். இதனால் ஏராளமான பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. அக்கம் பக்கத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என பலரிடம் கடன் வாங்கி அந்த பணத்தையும் ஆன்லைன் ரம்மி மூலம் இழந்துள்ளார்.

மேலும், மனைவியின் நகைகளையும் அடகு வைத்து ரூ.20 லட்சம் வரை கடன் வாங்கியதாகத் தெரிகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த உறவினர்கள் நாகராஜனிடம், ஆன்லைன் ரம்மி விளையாட்டை விட்டு விடும்படி அறிவுரை கூறியுள்ளனர்.

தனக்கு ஏற்பட்ட கடனுக்கு ரம்மி விளையாட்டுதான் காரணம் என்ற மன உளைச்சலில் நாகராஜன் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினர் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டிலேயே நாகராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து மணலி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இறப்பதற்கு முன் நாகராஜன் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்ததாகவும், அதில், "ஆன்லைன் ரம்மியால் எனக்கு ரூ.20 லட்சம் வரை கடன் ஏற்பட்டது. அதனால் தற்கொலை செய்து கொண்டேன்" என குறிப்பிட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

இருப்பினும், நாகராஜன் தற்கொலைக்கு ஆன்லைன் ரம்மிதான் காரணமா என போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை தீர்வாகாது

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

10 hours ago

க்ரைம்

12 hours ago

க்ரைம்

15 hours ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

மேலும்