சேலம் | தந்தையை கொன்ற மகன் கைது

By செய்திப்பிரிவு

சேலம்: சேலம் அருகே தந்தையை கல்லால் அடித்துக் கொலை செய்த மகனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சேலம் ஓமலூர் அடுத்த செல்லபிள்ளைகுட்டை பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி மாரியப்பன் (45). இவரது மகன் விஷ்ணுகுமார் (25). மாரியப்பன் தினமும் மதுகுடித்துவிட்டு வந்து தனது வீட்டிலும், வெளியிடங்களிலும் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு மாரியப்பன் அளவுக்கு அதிகமாக மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்து விஷ்ணுகுமாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதில், ஆத்திரம் அடைந்த விஷ்ணுகுமார் கல்லால் மாரியப்பனை தாக்கியுள்ளார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு சென்ற ஓமலூர் போலீஸார், மாரியப்பன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விஷ்ணுகுமாரை கைது செய்து, ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி,சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 hour ago

க்ரைம்

4 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

14 days ago

மேலும்