போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரிப்பு: திண்டிவனத்தில் நெட் சென்டருக்கு சீல்

By செய்திப்பிரிவு

விழுப்புரம்: திண்டிவனத்தில் போலி வாக் காளர் அடையாள அட்டை தயாரித்த நெட் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது.

திண்டிவனம் காமாட்சியம்மன் கோயில் தெருவில் இயங்கிவரும் நெட்சென்டரில், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அரசால் வழங்கப்படும் பல்வேறு அடையாள அட்டைகள், சான்றிதழ்கள் என அனைத்தும் போலியாக தயாரித்து விற்பனை செய்வதாக திண்டிவனம் சார்- ஆட்சியர் அமீதுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று சார்- ஆட்சியர் அமீது தலைமையிலான வருவாய்த்துறையினர் அந்த நெட் சென் டரில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

பல்வேறு ஆவணங்கள், போலி அடையாள அட்டை உள்ளிட்டவைகளை கைப்பற்றினர்.

மேலும் அக்கடைக்கு சீல் வைத்தனர். இதுதொடர்பாக கடையின் உரிமையாளர், பணியாற்றும் பெண் உள்ளிட்ட 2 பேர் மீது வருவாய்த்துறை சார்பில் திண்டிவனம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோல திண்டிவனத்தில் மேலும் 2 நெட் சென்டர்கள் செயல்படுவதாக புகார்கள் வந்துள்ளதாக வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

3 hours ago

க்ரைம்

4 hours ago

க்ரைம்

8 hours ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

மேலும்