திருவண்ணாமலை | வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர் கைது

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் காரில் சென்றவரை வழிமறித்து தாக்கி ஆயிரம் ரூபாயை பறித்த இளைஞரை பிடித்து காவல் துறையிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பழைய காவல் நிலைய வீதியில் வசிப்பவர் மணிகண்டன்(42). இவர், பெருங்குளத்தூர் கிராமத்தில் வசிக்கும் நண்பர் ஏழுமலைக்கு சொந்தமான காரை எடுத்துக் கொண்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனைக்கு நேற்று முன்தினம் மாலை சென்றுள்ளார்.

திருவண்ணாமலை - வேலூர் சாலையில் பச்சையம்மன் கோயில் அருகே உள்ள வேகத்தடையில் சென்றபோது, திருவண்ணாமலை சிவசக்தி விநாயகர் கோயில் வீதியில் வசிக்கும் ரஜினி மகன் சந்துரு(23) என்பவர் தான் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தை கொண்டு, காரை வழிமறித்துள்ளார்.

மேலும் அவர், மணிகண்டனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி தாக்கி உள்ளார். பின்னர், அவரது சட்டை பையில் இருந்த ஆயிரம் ரூபாயை பறித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அப்போது மணிகண்டன் கூச்சலிடவே, அருகே இருந்தவர்கள் திரண்டு வந்து சந்துருவை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது குறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட சந்துருவை கைது செய்தனர். மேலும், அவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

14 days ago

மேலும்