பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த ஜமீன்முத்தூர் பகுதியில் வசிக்கும் 8 வயது சிறுமி, வீட்டுக்கு முன்புறம் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, அவரது வீட்டின் அருகே வசிக்கும் அருக்காணி (36) என்பவர், சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று, வீட்டில் வைத்திருந்த உண்டியலை எதற்காக எடுத்தாய் எனக் கேட்டு திட்டியுள்ளார். பின்னர் அருக்காணி, கம்பியை சூடுபடுத்தி சிறுமியின் இரண்டு கைகளிலும் சூடு வைத்துள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த சிறுமியின் பாட்டி, அருக்காணியிடம் சிறுமிக்கு ஏன் சூடு வைத்தாய் எனக் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், சிறுமியின் பாட்டியை தகாத வார்த்தைகளால் அருக்காணி திட்டியுள்ளார்.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சிறுமியை சேர்த்த அவரது பாட்டி, மேற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிந்து அருக்காணியை கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
7 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago