வேலூர் | சென்னைக்கு வேனில் கடத்தப்பட்ட ரூ.12 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்: பெங்களூருவைச் சேர்ந்த 2 பேர் கைது

By செய்திப்பிரிவு

வேலூர்: பெங்களூருவில் இருந்து சென் னைக்கு கடத்த முயன்ற ரூ.12 லட்சம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.

கர்நாடகா மாநிலம் பெங்க ளூருவில் இருந்து வேலூர் வழியாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தடை செய்யப் பட்ட பான் மசாலா, பான் பராக், மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் உத்தரவின்பேரில், பள்ளி கொண்டா காவல் ஆய்வாளர் சுப்புலட்சுமி தலைமையிலான காவல் துறையினர், பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கிச்சென்ற வேனை காவல் துறையினர் மடக்கி சோதனை நடத்தினர்.

அந்த வேனில் தனித்தனியாக பார்சல் அடுக்கி வைக்கப்பட்டி ருப்பது தெரியவந்தது. அந்த பார் சல்களை காவல் துறையினர் பிரித்து பார்த்த போது அதில், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் அடுக்கிவைத்து சென்னைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.12 லட்சம் என கணக்கிடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, போதைப் பொருட்களை வேனில் கடத்தி வந்த பெங்களூருவைச் சேர்ந்த ரமேஷ் (36), சுரேஷ்(38) ஆகிய 2 பேரை காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடம் போதைப் பொருட்கள் எங்கிருந்து கடத்தி வரப்படுகிறது. யாருக்கு கொண்டு செல்லப் படுகிறது? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

15 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

மேலும்