ஓய்வு பெற்ற தலைமை காவலர் வீட்டில் 25 பவுன் நகைகள், பணம் திருட்டு

By செய்திப்பிரிவு

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அசோக் நகரைச் சேர்ந்தவர் சந்திரன் (71). ஓய்வுபெற்ற தலைமைக்காவலர். இவரது மனைவி சந்திரா (65), மகன் யுகானந்தன் (43). இவர், சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

அரக்கோணம் அசோக்நகர் பகுதியில் சந்திரன் தனது மனைவி சந்திரா, மகன் மற்றும் மருமகள், பேரக்குழந்தைகளுடன் மேல் தளத்தில் வசித்து வருகிறார். கீழ் தளத்தை வாடகைக்கு விட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு புழுக்கம் அதிகமாக இருந்ததால் வீட்டின் வெளிப்பக்க கதவை திறந்து வைத்துவிட்டு சந்திரன் வீட்டில் உள்ள ஒரு அறையில் தனது மனைவியுடன் உறங்கினார். மற்றொரு அறையில் மகன் யுகானந்தன், மருமகள் கலைச் செல்வி மற்றும் குழந்தைகளுடன் உறங்கினார்.

நேற்று காலை எழுந்து பார்த்த போது வீட்டில் மற்றொரு அறையில் இருந்து பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் கீழே சிதறிக்கிடந்ததை கண்டு சந்திரன் குடும்பத்தார் அதிர்ச்சியடைந்தனர். பீரோவை சோதனையிட்ட போது அதிலிருந்த 25 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் பணம், வெள்ளிப்பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

வீட்டில் ஆட்கள் இருக்கும் போது சத்தமில்லாமல் வந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த நகை, பணத்தை திருடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் யுகானந்தன் அளித்த புகாரின் பேரில் அரக்கோணம் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

6 hours ago

க்ரைம்

7 hours ago

க்ரைம்

11 hours ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

மேலும்