ஈரோடு: ஈரோட்டில் கந்துவட்டி வசூலித்த புகாரில் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
ஈரோடு வீரப்பன்சத்திரம் கொங்கு நகரைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (40). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரிடம், ஈரோடு சம்பத் நகர் நேரு வீதியைச் சேர்ந்த கறிக்கடை நடத்தி வரும் முகமது ஷெரீப் (35), 3 ஆண்டுகளுக்கு முன்னர் ரூ.1.50 லட்சம் கடனாகப் பெற்றுள்ளார். கரோனா ஊரடங்கு காரணமாக, தொழில் பாதிக்கப்பட்டதால், கடன் தவணையை முறையாக செலுத்த முடியவில்லை.
இதையடுத்து திருநாவுக்கரசு, முகமது ஷெரீப்பிடம் வாங்கிய ரூ.1.50 லட்சத்திற்கு வட்டிக்கு, வட்டி போட்டு ரூ.3 லட்சமாக கொடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளார். பணத்தை தர மறுத்தால் கொலை செய்வதாக மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து முகமது ஷெரீப், ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸில் புகார் அளித்தார். இதன்பேரில், போலீஸார் விசாரணை நடத்தி, திருநாவுக்கரசு மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
தமிழக காவல் துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு, கந்து வட்டி தொடர்பாக வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட மறுநாளே, ஈரோட்டில் கந்து வட்டிக்கு பணம் கொடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கந்துவட்டி தொடர்பாக, பொதுமக்கள் தயங்காமல் புகார் அளிக்கலாம் என ஈரோடு டி.எஸ்.பி ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
3 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
14 days ago
க்ரைம்
14 days ago