உதகை | மனைவி தற்கொலை வழக்கில் காவலர், பெற்றோர் கைது

By செய்திப்பிரிவு

உதகை: உதகையில் காவலரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில், காவலர் மற்றும் அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், கவிதா தம்பதியின் மகன் வினீத் பாலாஜி (29). இவர், உதகை நகர் மேற்கு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த கார்த்திகைவேல் மகள் முத்துப்பாண்டீஸ்வரிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

இருவரும், உதகையில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தனர். கடந்த 7-ம் தேதி காவலர் குடியிருப்பில் முத்துப்பாண்டீஸ்வரி தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் இருந்தார். உதகை நகர் மேற்கு போலீஸார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வரதட்சணை கொடுமை காரணமாக தங்கள் மகள் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர், கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். இந்நிலையில் வரதட் சணை கொடுமை புகாரின் பேரில் காவலர் வினித் பாலாஜி, அவரது பெற்றோரை உதகை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

7 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

மேலும்