சென்னை: நள்ளிரவில் கதவை தட்டி, இளம்பெண்ணின் முகத்தில் அமிலத்தை வீசிச் சென்ற பெண் உட்பட 2 பேரை மதுரவாயல் போலீஸார் கைது செய்தனர். காதல் விவகாரத்தால் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சென்னை ஆலப்பாக்கம் பெருமாள் கோயில் தெருவில் தனது தாயுடன் வசிப்பவர் அஸ்வினி என்ற லேகா (26). கடந்த 5-ம் தேதி அதிகாலை 3.45 மணி அளவில் வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, அஸ்வினியும், அவரது தாயும் கதவை திறந்து பார்த்தனர்.
அப்போது, அங்கு நின்றிருந்த ஒரு பெண்ணும், ஆணும் தகாத வார்த்தைகளால் பேசி, அஸ்வினியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். திடீரென, பாட்டிலில் மறைத்து வைத்திருந்த அமிலத்தை அஸ்வினியின் முகத்தில் வீசிவிட்டு, இருவரும் தப்பினர். இதில் அஸ்வினியின் முகத்திலும், அருகில் இருந்த அவரது தாய்க்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களது அலறல் சத்தம் கேட்டு, அருகில் வசிப்பவர்கள் ஓடிவந்து இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இச்சம்பவம் குறித்து மதுரவாயல் போலீஸார் விசாரணை நடத்தினர். அமிலத்தை வீசியது போரூர் மங்களா நகரை சேர்ந்தஐஸ்வர்யா (36), நன்மங்கலம்விஜயலட்சுமி நகரைச் சேர்ந்த தீனதயாளன் (36) என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார்கைது செய்து, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: தற்போது கைது செய்யப்பட்டுள்ள தீனதயாளனை அஸ்வினி காதலித்து வந்துள்ளார். தீனதயாளனுக்கு திருமணம் ஆனது தெரிந்ததும், அவரைவிட்டு விலகி, பேசுவதையும் தவிர்த்து வந்துள்ளார். இதனால், தீனதயாளன் கோபத்தில் இருந்துள்ளார்.
இதற்கிடையில், பார்த்திபன் என்பவருடன் அஸ்வினிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பார்த்திபனின் தோழியான ஐஸ்வர்யா என்பவருக்கும் அஸ்வினி மீது கோபம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தீனதயாளன், ஐஸ்வர்யா ஆகிய இருவரும் அஸ்வினியை பழிவாங்குவதற்காக அவரது முகத்தில் அமிலத்தை வீசிச் சென்றுள்ளனர்.
இவ்வாறு போலீஸார் கூறினர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
23 hours ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago