சென்னையில் ரூ.4.21 கோடி தங்கம் பறிமுதல்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.4.21 கோடி மதிப்புள்ள 9 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

துபாயில் இருந்து ஒரு விமானம் கடந்த 2-ம் தேதி சென்னை வந்தது. இதில் வரும் சில பயணிகள் அதிக அளவில் தங்கம் கடத்திவருவதாக, விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தினர்.

இதற்கிடையில், சுங்க அதிகாரிகளுக்கு பயந்து, விமானக் கழிவறை மற்றும் சர்வதேச விமான முனைய கழிவறையில் அந்த தங்கத்தை கடத்தல் நபர்கள் போட்டுவிட்டுச் சென்றதாக தகவல் வெளியானது.

இதையடுத்து, கழிவறைகளில் இருந்து ரூ.4.21 கோடி மதிப்பிலான 9.02 கிலோ தங்கம் மீட்கப்பட்டது. தப்பிய கடத்தல் நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

14 days ago

க்ரைம்

14 days ago

மேலும்