கோவை: கோவை ஆர்.எஸ்.புரத்தில் தீக்காயத்துடன் மீட்கப்பட்ட பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தொழிலதிபர், அவரது மனைவி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 37 வயது பெண் ஒருவர், கணவரைப் பிரிந்த நிலையில், கடந்த சில நாட்களாக தாயார் வீட்டில் தங்கி, அருகில் உள்ள சிமெண்ட் மற்றும் டைல்ஸ் விற்பனை நிறுவனத்தில் வேலைக்கு சென்றுவந்தார்.
கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த நவநீதன் என்பவர் அந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த மே 29-ம் தேதி கோவை வந்த அந்தப் பெண், தான் வேலை செய்யும் நிறுவன உரிமையாளர் வீட்டுக்கு சென்று தனக்கு மருத்துவ செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு பிறகு சிறிது நேரத்தில் தீக்காயங்களுடன் அவர் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நிறுவன உரிமையாளர் சிகிச்சைக்கு பணம் தர மறுத்ததால் தீக்குளித்ததாக அப்போது தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
இந்நிலையில், முதலில் தான் தற்கொலைக்கு முயன்றதாக ஆர்.எஸ்.புரம் போலீஸாரிடம் கூறிய அப்பெண், பிறகு அளித்த தகவலில், நவநீதன் தன்னை பல முறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும், இதனால் தான் கருத்தரித்து அதனைக் கலைத்துள்ளதாகவும், 29-ம் தேதி கோவை வந்தபோது, நவநீதன் மற்றும் அவரது மனைவி அகிலா இருவரும் தன்னை வீட்டுக்குள் அழைத்துச் சென்று தீ வைத்து விட்டதாகவும் தெரிவித்தார்.
இதனால் ஆர்.எஸ்.புரம் போலீஸார் நவநீதன் மற்றும் அவரது மனைவி மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனர். இச்சூழலில் நேற்று முன்தினம் இரவு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அப்பெண் உயிரிழந்தார். இதையடுத்து தம்பதி மீதான வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீஸார் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அவர்களைத் தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
18 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago