தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு படகில் செல்ல முயன்றவர் உட்பட 2 பேர் கைது

By செய்திப்பிரிவு

ராமேசுவரம்: தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு சட்ட விரோதமாக செல்ல முயன்றவர் உட்பட 2 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

ராமேசுவரம் ரயில் நிலையத்தில் புதன்கிழமை இரவு தனியாக நின்றிருந்த இளைஞரை க்யூ பிரிவு போலீஸார் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவர், இலங்கையில் உள்ள வவுனியாவைச் சேர்ந்த விஜயராம் மகன் கீர்த்திகன்(28) என்பதும், இலங்கையிலிருந்து லண்டன் செல்வதற்காக 2020-ம் ஆண்டு சுற்றுலா விசாவில் சென்னை வந்தார் என்பதும் தெரிய வந்தது.

மேலும் போலி பாஸ்போர்ட் மூலம் லண்டன் செல்ல முயற்சி செய்த கீர்த்திகன் 2 ஆண்டுகளாக பலன் அளிக்காததால் மீண்டும் இலங்கைக்கு திரும்ப நினைத்தபோது விசா காலாவதியாகிவிட்டது. இதையடுத்து ராமேசுவரம் புது ரோடு பகுதியைச் சேர்ந்த முத்துக்குமரன்(48) என்பவரிடம் ரூ.10 ஆயிரம் கொடுத்து தனுஷ்கோடியில் இருந்து படகு மூலம் இலங்கை செல்வதற்காக ராமேசுவரம் வந்தது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து கீர்த்திகன் மீது பாஸ்போர்ட் தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராமேசுவரம் டவுன் போலீஸார் கைது செய்தனர். இவருக்கு உதவியதாக முத்துக்குமரனை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

14 days ago

மேலும்