கோவில்பட்டி | இளைஞர் கொலை: தம்பி கைது

By செய்திப்பிரிவு

கோவில்பட்டி: கோவில்பட்டி நடராஜபுரம் 5-வதுதெருவை சேர்ந்த தங்கப் பாண்டியன் மகன் செல்லத்துரை(26). தங்கப்பாண்டியன் கடந்த சிலஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். செல்லத்துரை கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வந்த செல்லத்துரை, செலவுக்கு பணம் கேட்டு தனது தாயிடம் தகராறு செய்துள்ளார். இதனை அவரது தம்பி முத்துச்செல்வம் (19) தட்டிக்கேட்டார். அப்போது தாக்கப்பட்ட செல்லத்துரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து டி.எஸ்.பி. (பொறுப்பு) சங்கர், மேற்கு காவல் ஆய்வாளர் கிங்ஸ்ஸி தேவ்ஆனந்த், உதவி ஆய்வாளர் அரிகண்ணன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, செல்லத்துரையின் உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து, முத்துச்செல்வத்தை கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

14 days ago

க்ரைம்

14 days ago

மேலும்