தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சொத்துக்காக கூலித் தொழிலாளியை கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி, மகன், மகள் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
சாத்தான்குளம் அருகே உள்ளஅமுதுண்ணாக்குடியைச் சேர்ந்தவர் பெ.மகாராஜன் (65), கூலித்தொழிலாளி. இவரது மனைவி முருகம்மாள் (55). இவர்களுக்கு பெனிஸ்கர் (22) என்ற மகனும், 3 மகள்களும் உள்ளனர். ஒரு மகளுக்கு திருமணமாகி உவரியிலும், மகன் சென்னையிலும் இருந்துவந்தனர்.
மகாராஜன் தனது மனைவி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறுசெய்துள்ளார். இதனால் அவர்களுக்குள் பிரச்சினை இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை மகாராஜன் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக சாத்தான்குளம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
காவல் ஆய்வாளர் பாஸ்கர்தலைமையிலான போலீஸார்அங்கு சென்று மகாராஜன்சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்துவிசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் பிரேத பரிசோதனையில் மகாராஜனை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில், சென்னையில் இருந்த கடந்த வாரம் ஊருக்கு வந்திருந்த பெனிஸ்கர், மகாராஜனிடம் வங்கியில் அடமானம் வைக்க வீட்டை தன் பெயருக்கு மாற்றித் தருமாறு கேட்டுள்ளார்.
ஆனால், மகாராஜன் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றவே, பெனிஸ்கர் கயிறால் மகாராஜன் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதும், இதற்கு உடந்தையாக தாய் முருகம்மாள், சகோதரி இசக்கி ரேவதி ஆகியோர் செயல்பட்டுள்ளதும் தெரிய வந்தது.
இதனையடுத்து கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து முருகம்மாள், பெனிஸ்கர், இசக்கிரேவதி ஆகிய மூவரையும் போலீஸார் நேற்று கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
14 days ago