திருப்பூர்: திருப்பூர் நொச்சிப்பாளையம் பிரிவில் சுப்பிரமணி என்பவரிடம் சிலர் கத்தியைக் காட்டி மிரட்டி, செல்போனை பறித்துச் சென்றனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த வீரபாண்டி போலீஸார், திருவண்ணா மலையை சேர்ந்த நவீன்குமார் (25), செங்கம் பகுதியை சேர்ந்தஅஜய் (22) உட்பட 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் ஏற்கெனவே 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நவீன்குமார் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 வழக்குகளும், அஜய் மீது கொலை மிரட்டல், திருட்டு என 2 வழக்குகளும் உள்ளன. இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் ஏ.ஜி.பாபு உத்தரவிட்டார். இதற்கான உத்தரவைகோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும் போலீஸார் வழங்கினர். திருப்பூர் மாநகரில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 42 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
22 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago