சிங்கம்புணரி அருகே திருட்டு பைக்கில்: திருடிய இடத்துக்கே வந்து சிக்கிக்கொண்ட இளைஞர்

By செய்திப்பிரிவு

சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் அருகே மற்றொரு இடத்தில் திருடிய மோட்டார் சைக்கிளில், ஏற்கெனவே திருடிய இடத்துக்கு வந்த இளைஞர் போலீஸாரிடம் சிக்கிக் கொண்டார்.

சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த லாரன்ஸ் மகன் மகிமைராஜ் (27). இவர் ஒரு மாவட்டத்தில் திருடிய மோட்டார் சைக்கிளை, மற்றொரு மாவட்டத்தில் விற்று விட்டு செலவழிப்பது வழக்கம். இந்நிலையில், அவர் கடந்த ஏப்ரல் மாதம் சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே புழுதிபட்டியில் சிக்கந்தர்பாட்ஷா என்பவரது மோட்டார் சைக்கிளை திருடிக்கொண்டு தப்பினார். அவர் துவரங்குறிச்சி அருகே சென்றபோது, பெட்ரோல் இல் லாததால் மோட்டார் சைக்கிளை ஓட்ட முடியவில்லை. அதனை உருட்டிச் சென்றால் மாட்டிக்கொள் வோம் என நினைத்து கண்மாயில் விட்டுவிட்டு சென்றார்.

இந்நிலை யில் நேற்று திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியில் திருடிய மோட்டார் சைக்கிளில் புழுதிபட்டிக்கு வந்தார். அப் போது அப்பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட எஸ்.ஐ நாசர் தலைமையிலான போலீஸார் மகிமைராஜிடம் விசாரித்தனர். முறையான ஆவணங்கள் இல்லாததால் சந்தேகமடைந்த போலீஸார், அவரிடம் தொடர்ந்து விசாரித்தனர். அவர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

க்ரைம்

15 hours ago

க்ரைம்

16 hours ago

க்ரைம்

20 hours ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

12 days ago

மேலும்