காட்பாடி: புற்று நோயால் மனைவி உயிரிழந்ததால் மனமுடைந்த மின்வாரிய ஊழியர், மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம், டி.கே.புரம் பகுதியைச் சேர்ந்தவர் தினகரன்(50). மின்வாரிய ஊழியர். இவரது மனைவி சிவக்குமாரி(45). இவர் களது மகள்கள் பவித்ரா (16), பிருந்தா(14). இந்நிலையில், புற்று நோயால் அவதிப்பட்டு வந்த சிவக்குமாரி கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் மனமுடைந்த தினகரன் நேற்று முன்தினம் இரவு படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் சிவக்குமாரியின் புடவையை மாட்டி அதில் தன் மகள்களை தொங்கவிட்டார். அருகேயுள்ள மற்றொரு மின் விசிறியில் தினகரனும் தனது மனைவியின் புடவையால் தூக் கிட்டார். இதில், மூத்த மகள் பவித்ரா தொங்கிய புடவை திடீரென அறுந்து விழுந்ததால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவர் அலறி கூச்ச லிட்டதால் அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.
அப்போது, மின்விசிறியில் தினகரனும், இளையமகள் பிருந்தாவும் உயிரிழந்த நிலையில் தொங்கு வதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற விருதம்பட்டு காவல் துறையினர் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து விருதம்பட்டு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
16 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago